ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி

Tamilnadu Assembly Election News:  ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க., செயல்படும்: கருணாநிதி

சென்னை;தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணி, 234 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. அதேநேரத்தில், 180 தொகுதி களில் தான் தி.மு.க., போட்டியிட்டது. அதிலும், தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் நேரடியாக போட்டியிட்ட, 172 இடங்களில், தி.மு.க., 89 இடங்களிலும், அ.தி.மு.க., 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அத்துடன், தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள்

போட்டியிட்ட, 60 இடங்களில், 51 இடங்களை,அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. மேலும், தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வலிமையுடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய வாய்ப்பு, தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழக சட்டசபையில், ஆக்கப்பூர்வமான வகையில், நல்லதோர் எதிர்க்கட்சியாக, மக்களின் பிரச்னை களை முன்வைத்து, தி.மு.க., பணியாற்றும் என்ற நம்பிக்கையை, தமிழக மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறிஉள்ளார்.

3 மாநில முதல்வர்களுக்கு கருணாநிதி வாழ்த்து: சென்னை;கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்வர்களுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை

யிலான இடதுசாரி முன்னணி, 91 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பின ரான பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
அவருக்கும், மேற்கு வங்க முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள மம்தா பானர்ஜி, அசாம் முதல்வராகவுள்ள சர்பானந்தா சோனவால் ஆகியோருக்கும், தனித் தனியாக வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார் கருணாநிதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016