தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ ஆலோசனை

Tamilnadu Assembly Election News:  தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ  ஆலோசனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர, விஜயகாந்தும், வைகோவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்'
இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.
மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. தேர்தல் தோல்வியால் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ண னும் சோகமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவல கத்தில், ஆறு பேரும் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணிநேரஆலோசனையில், தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர திட்ட மிட்டுள்ளனர்.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவ தாவது:பணப்பட்டுவாடா காரணமாகவே, கூட்ட ணிக்குஎதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, விஜயகாந்த் உட்பட, கூட்டணி கட்சி தலைவர் கள் கருதுகின்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சா வூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளிலும் பண ப்பட்டுவாடா நடந்துள்ளது.

இதை காரணமாக்கி, அனைத்து தொகுதிகளி லும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர உள்ளனர். பணப்பட்டு வாடாவை தடுக்க தவறியதாக, தலைமை தேர் தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப் படுகி றது

.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016