முதல்வராக ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்த விஜயகாந்த்

Tamilnadu Assembly Election News: முதல்வராக ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்த விஜயகாந்த்

இந்த முறை எப்படியும் கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆர்வமாக காய் நகர்த்திய கட்சி தி.மு.க.,

காரணம், 2006ல், 8.38 சதவீதம்; 2011ல் 7.88 சதவீதம் ஓட்டுகளை, அந்த கட்சி பெற்றிருந்ததே.
பலமான அ.தி.மு.க.,வை வெல்ல, தே.மு.தி.க., வை கூட்டணிக்குள் கொண்டு வர ஆசைப் பட்டனர். இருப்பினும், முதல்வர் கனவில் இருந்தார் விஜயகாந்த். அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த அவர், தி.மு.க., பக்கம் செல்ல வேண்டும் என, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலி யுறுத்தியபோதும், இறங்கி வரவில்லை.

இறுதியில், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட, மக்கள் நலக் கூட்டணி யுடன் இணைந்தார். இதனால்,
அ.தி.மு.க., மகிழ்ச்சி அடைந்தது என்றால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்தது. விளைவு, கட்சியில் இருந்த முக்கிய எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், சேகர், பார்த்திபன் ஆகிய மூவரும் விலகி, மக்கள் தே.மு. தி.க., என்ற புதிய கட்சியை துவக்கி, தி.மு.க.,
கூட்டணியில் இணைந்தனர்.

இப்படி கட்சி கலகலத்து போனது ஒருபக்கம் என் றால், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த நாள் முதலே ஏற்பட்ட சலசலப்புகள், கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தியது.குறிப்பாக, 'கூட்டணிக்காக தி.மு.க., தரப்பு விஜயகாந்திடம் பேரம் பேசியது' என, வைகோ கூறியது; 'அப்படி எதுவுமில்லை' என, பிரேமலதா மறுத்தது என, சலசலப்பு ஆரம்பமானது.

போதாக்குறைக்கு, 'ஆட்சி அமைந்தால் இவர், இவர் இந்த துறைகளுக்கு அமைச்சர்' என, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பட்டியல் வாசிக்க, அதற்கு கூட் டணி கட்சி தலைவர்கள் எதிர் கருத்து தெரிவித்த னர். இப்படியாக, தொடர்ந்து, கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பை சரி செய்யவே பல நாட்கள் ஆனது.

அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் இருந்து, மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு, இவர்களின் செயல்பாடு ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை தந்தது. இதனால், மக்கள் நம்பிக்கையை, மூன்றாவது அணி பெறவில்லை. விஜயகாந்த் பிரசார பேச்சும் பெரிதாக எடுபடவில்லை.

ஒரு கட்டத்தில், விஜயகாந்த் வெற்றியே கேள்விக்குறி என்ற தகவல்கள் கிடைக்கவே, கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு பிரசாரம் செய்வதை தவிர்த்து, அவர் போட்டியிட்ட உளுந்துார் பேட்டையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.இருந்தும் பலன் கிடைக்கவில்லை;

விஜயகாந்த் டிபாசிட்டையே பறிகொடுத்தார். கட்சி ஆரம்பித்து, மிக குறுகிய காலத்தில் எதிர்க் கட்சி வரிசைக்கு வந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போயுள்ளது. மேலும் அதிர்ச்சியாக, அதன் ஓட்டு சதவீதம், 2.4 ஆகவும் குறைந்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தையும் இழந்துள் ளது. இந்த சரிவில் இருந்து மீண்டு வருவது தே.மு.தி.க.,வுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016