அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

Tamilnadu Assembly Election News: அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற்றதன் மூலம், அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை கூடும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த கே.பி. ராமலிங்கம், தங்கவேலு; அ.தி.மு.க., வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், வில்லியம் ரபி பெர்னாட்; காங்கிரசைச் சேர்ந்த, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரின் பதவிக் காலம், ஜூன், 29ல் நிறைவு பெறுகிறது.

புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, ஜூன், 11ல் தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள் ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 24ம் தேதி துவங்குகிறது. நடந்து முடிந்த சட்டசபை
தேர்தலில், அ.தி.மு.க., 134 இடங்களிலும், தி.மு.க.,89 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும், காங்கிரஸ், எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அதன்படி, அ.தி.மு.க., சார்பில், நான்கு ராஜ்யசபா எம்.பி., க்களை தேர்வு செய்ய, 136 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. அதற்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் பற்றாக்குறை உள்ளது.

தி.மு.க., கூட்டணி சார்பில், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, 102 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், 98 எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர். தேர்தல் நடத்தினால், இரண்டாவது ஓட்டு முன்னுரிமை அடிப்படையில், அ.தி.மு.க., நான்கு இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

எனவே, தி.மு.க., இரண்டு இடங்களில் மட்டும் போட்டியிட முடிவு செய்து, வேட்பாளர்களாக ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவ னைஅறிவித்துள்ளது. அ.தி.மு.க., நான்கு இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அ.தி.மு.க.,வுக்குதமிழகத்தில் இருந்து, எட்டு ராஜ்சயபா எம்.பி.,க்கள், புதுச்சேரியில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி., உள்ளனர். தற்போது நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டால், ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 13 ஆக உயரும். லோக்சபா எம்.பி.,க்கள், 37 பேரை சேர்த்தால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 50 ஆக உயரும்.

தேர்தலுக்கு வாய்ப்பு குறைவு!

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., இரண்டு வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது. அ.தி.மு.க., நான்கு வேட்பாளர்களை அறிவித்து, காங்கிரஸ் தரப்பில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்தால் மட்டுமே, தேர்தல் நடக்கும். அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், இம்முறை தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016