முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா: கருணாநிதி

Tamilnadu Assembly Election News:  முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான்  பாரபட்சமற்ற நடவடிக்கையா: கருணாநிதி

சென்னை:'முதல்வர் காலில் விழுந்து வணங் குவது தான் பாரபட்சமற்ற நடவடிக் கையா?' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க, இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என, தேர்தல் கமிஷன் முதலில் அறிவித்தது.

தற்போது அதையும் தாண்டி, ஏதோ, பா.ஜ., -
பா.ம.க., கட்சிகள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் கமிஷன், மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளி லும், மூன்று வாரங்களுக்குதேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கின்றனர் என்றால் என்ன நியாயம்?

இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா பற்றி விசாரிக்க, மூன்று வாரங்கள் தேவையா? அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் கருத்துகளை அறிந்திட வேண்டாமா?

பா.ம.க.,வும், பா.ஜ.,வும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தனர். யாருடைய துாண்டுதலின் பேரில், வழக்குதொடுத்தனர்.

அதற்காக, இரண்டு தொகுதிகளின் தேர்தலை, மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா; இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகிற காரியம்.
இதற்காகவா, ஒரு தேர்தல் ஆணையம்? தேர்தல் கமிஷன் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?

முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான், பாரபட்சமற்ற நடவடிக்கையா? இப்படிப்பட்ட தேர்தல் கமிஷன்கள் இருக்கிற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக் காது, நீதியே நீ இன்னும் இருக்கின் றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்தில் விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016