ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெ.,

Tamilnadu Assembly Election News: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெ.,

சென்னை: தமிழகத்தில் 6வது முறை முதல்வராக பொறுப்பேற்கும் ஜெ., இன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிகட்டிலில் ஜெ., அமர்கிறார். நேற்று மாலை (20 ம்தேதி ), மாலை நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் ஜெ., அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி முதல்வராக ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரும் கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து ஜெ., இன்று கொடுத்தார்.


கவர்னர் மாளிகைக்கு சென்ற அவரை கவர்னர் மற்றும் அவரது மனைவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த சம்பிரதாயம் முடிந்த பின்னர் ஜெ., போயஸ்கார்டன் திரும்பினார். ஜெ.,வுடன் ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் சென்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016