சட்டசபை காங்., தலைவர் பதவி வசந்தகுமார், விஜயதாரணி போட்டி

Tamilnadu Assembly Election News:  சட்டசபை காங்., தலைவர் பதவி வசந்தகுமார், விஜயதாரணி போட்டி

தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, எட்டு இடங்களிலும்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகள், தோல்வியை தழுவின.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்
போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் பிரின்ஸ்; கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார்; விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
'சிட்டிங்' எம்.எல்.ஏ., விஜயதாரணி, மீண்டும் வெற்றி பெற்றுள்ளது, கட்சியில் அவரது செல்வாக்கை உயர்த்தி உள்ளது.இந்நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, வசந்தகுமார், விஜயதாரணி ஆகியோர் காய் நகர்த்த துவங்கி உள்ளனர். இதற்காக
இருவரும் டில்லி சென்று, மேலிட தலைவர்கள் மூலம் பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016