அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு 1.1 சதவீதம் தான் வித்தியாசம்: கிடைத்த ஓட்டுகள் குறித்து கருணாநிதி 'கணக்கு'

Tamilnadu Assembly Election News:  அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு 1.1 சதவீதம் தான் வித்தியாசம்: கிடைத்த ஓட்டுகள் குறித்து கருணாநிதி 'கணக்கு'

சென்னை: 'அ.தி.மு.க., - தி.மு.க., அணிகளுக்கு இடையே, 1.1 சதவீத ஓட்டுகள் வித்தியாசம் தான் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு, ஒரு கோடியே, 71 லட்சத்து, 75 ஆயிரத்து, 374 ஓட்டுகள், அதாவது, 39.7 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க., அணிக்கு, ஒரு கோடியே, 76 லட்சத்து, 17 ஆயிரத்து, 60 ஓட்டுகள், அதாவது, 40.8 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., அணிக்கும், தி.மு.க., அணிக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம், நான்கு லட்சத்து, 41 ஆயிரத்து, 686 ஓட்டுகள் தான்; அதாவது, 1.1 சதவீத ஓட்டுகள் தான். எப்படி என்றாலும், அவர்கள் ஆளுங்கட்சி; நாம் எதிர்க் கட்சி.
எதிர்க்கட்சி என்றால், சட்டசபையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு, 89 உறுப்பினர்களைக் கொண்ட, தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி. தி.மு.க., கூட்டணிக்கு, ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி.
திருவாரூர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, இரண்டாவது முறையாக, அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட எனக்கு, ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 473 ஓட்டுகளை அளித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில், மிக அதிக வித்தியாசமான, 68 ஆயிரத்து, 366 ஓட்டுகளில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தற்கொலை செய்ய வேண்டாம்!

'தி.மு.க., ஆளுங்கட்சியாக வர முடியாத காரணத்திற்காக, தொண்டர்கள் தற்கொலை செயலில் ஈடுபடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: ஈரோடு வடக்கு மாவட்டம், சுண்டக்காம்பாளையம் என்ற ஊரில், இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றிய சண்முகம், சட்டசபை தேர்தல் முடிவுகளை, 'டிவி'யில் பார்த்து, தி.மு.க., ஆளுங்கட்சியாக வர முடியாத நிலையை எண்ணி அதிர்ச்சிக்குள்ளானார்.
அவர் கடிதம் எழுதி வைத்து, தற்கொலை செய்து கொண்டார். சண்முகம் குடும்பத்தினர் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகவும் சோகத்தை
ஏற்படுத்தும், இது போன்ற நடவடிக்கையில் யாரும் இனியும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016