மக்கள் அளித்த அங்கீகாரம் தான் தேர்தல் வெற்றி: முதல்வர் ஜெ., பெருமிதம்

Tamilnadu Assembly Election News:  மக்கள் அளித்த அங்கீகாரம் தான் தேர்தல் வெற்றி: முதல்வர் ஜெ., பெருமிதம்

சென்னை :'அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலனுக்காக, பல திட்டங்களை செயல் படுத்தியதற்கு, மக்கள் அளித்த அங்கீகாரம் தான் தேர்தல் வெற்றி' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு பின், அதே போன்ற, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை, தமிழக மக்கள், அ.தி.மு.க.,விற்கு வழங்கியுள்ளனர். 'நான் என்றும் மக்கள் பக்கம் தான்; மக்கள் என்றும் என் பக்கம் தான்' என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

மக்கள் நலன்: மக்கள் நலனுக்காக, அ.தி.மு.க., கடந்த, ஐந்து ஆண்டுகளில், பல திட்டங்களை
செயல்படுத்தி உள்ளது. அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி.
தி.மு.க.,வினர் ஊடகங்கள் வாயிலாகவும், பிரசாரங்கள் மூலமாகவும், பல பொய்களை கட்டவிழ்த்து விட்டனர்.

அவர்களின் பொய்குற்றச் சாட்டுகளை மறுத்து, விளக்கங்களை அளித்தாலும், அதை பற்றி கிஞ் சித்தும் கவலைப் படாமல், கோயபல்ஸ் பாணியில், தாங்கள் சொன்ன பொய்களை, திரும்ப திரும்ப சொல்லி வந்தனர்.

குற்றச்சாட்டுகள்அ.தி.மு.க., அரசு பற்றி கற்பனை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், இவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து உள்ளனர்.

தமிழக மக்களை, அதிலும் குறிப்பாக, ஏழை மக்களை காக்கும் இயக்கம், அ.தி.மு.க., தான் என்பதை, தமிழக மக்கள் நன்கு உணர்ந்த காரணத் தால் தான்,மீண்டும் ஆட்சி பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளனர்.தேர்தல் நடந்த, 232 சட்டசபை தொகுதிகளில், 134 இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து உள்ளனர். என் மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள, தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை
வழங்கியதற்காக நெஞ்சார்ந்த நன்றி.

புதிய உத்வேகம்:
நான் ஏற்கனவே சொல்லிய தைப் போல், தமிழக மக்கள் மீது எனக்குள்ள நன்றியுணர்வை வெளிப்படுத்த, அகராதியில் போதிய வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் நலனுக்காக, நான் புதிய உத் வேகத் துடன் செயல்பட்டு, என் நன்றியை செயலில் காண்பிப்பேன். தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த, கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர் களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016