அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஸ்டாலின்

Tamilnadu Assembly Election News:  அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஸ்டாலின்

சென்னை: ''தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில், சட்டசபையில் சிறப்பாக செயல்படுவோம்,'' என, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின்தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

* சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. இதன் பாதிப்பு, தஞ்சை மற்றும்அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா?தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அவ்வாறு செயல்பட்டால், முடிவுகள் பாதிக்கப்படாது.
* சட்டசபையில் தி.மு.க.,வின் நிலைப்பாடு எப்படிஇருக்கும்?ஏற்கனவே, 23 பேர் சட்டசபையில் சிறப்பாக செயல்பட்டோம். தற்போது அதிகம் பேரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில், சட்டசபையில் செயல்படுவோம்.
* சாதிக் பாட்ஷா மரணம் குறித்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறதே?அவரது மரணம் குறித்து, நேர்மையான முறையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தவேண்டும் என்பதே எங்களின் எண்ணமும்.
* தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினீர்கள். தற்போது என்ன செய்ய உத்தேசம்?சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நீதிமன்றம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.* காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைத்ததால் தான், குறைவான இடங்கள் பெற்றதாக கூறப்படுகிறதே?
உங்களது நக்கலான, நையாண்டித்தனமான கேள்விகளுக்கு, பதில் கூற விரும்ப வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016