வேட்பாளர்களை நோக வைத்த நோட்டா

Tamilnadu Assembly Election News: வேட்பாளர்களை நோக வைத்த நோட்டா

சென்னை: நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா" என்று கிண்டலடித்தவர்கள் பலர் ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது

சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா, 1687 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்திருப்பது 4048 ஓட்டு.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத் தொகுதியில் நோட்டாவுக்கு 1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன


கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 3595.


ஆவடியில் தி.மு.க., வேட்பாளர் நாசர், 1395 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி . இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4994


பர்கூர் தொகுதியில் தி.மு.க., கோவிந்தராசன் 982 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1392 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.


சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 1507 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1724


கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிஞ்சி பிராபகரன் 1332 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 3884.


கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 428 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2350.


மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சச்சிதானந்தம் 2222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2715


ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 491 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2612 ஓட்டுக்கள் கி டைத்தன.


பெரம்பூர் தொகுதியில் தி.முக., கூட்டணியில் போட்டியிட்ட தனபாலன், 519 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கு நோட்டாவுக்கு 3167 ஓட்டுக்கள் கிடைத்தன.


பேராவூரணியில் தி.மு.க., வேட்பாளர் அசோக் குமார் 995 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1294 ஓட்டுக்கள் கிடைத்தன.


ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1821 ஓட்டுக்கள் கிடைத்தன.


தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 462 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3391 ஓட்டுக்கள் கிடைத்தன.


திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன் 950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 2116 ஓட்டுக்கள் கிடைத்தன.


தி.நகரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.என்.கனிமொழி 3155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3570 ஓட்டுக்கள் கிடைத்தன.


விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 2333 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3897 ஓட்டுக்கள் கிடைத்தன.


இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.


ஆக, இந்தத் தேர்தலில் நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016