லக்கானி நல்லவர், ஆனால் வல்லவர் இல்லை: அன்புமணி

Tamilnadu Assembly Election News: லக்கானி நல்லவர், ஆனால்  வல்லவர் இல்லை: அன்புமணி

சென்னை: பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி:

நல்ல திட்டங்கள் தேவையில்லை எனவும், பணம் மட்டும் போதும் எனவும் மக்கள் நினைத்தனர். பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிப்பதற்கு பதில் பணம் கொடுத்து விடலாம் என நினைக்கிறேன். இந்த தேர்தலில், இரு கட்சிகளுக்கும் மாற்று பா.ம.க., என்பது தெளிவாகியுள்ளது.

இனிமேல் கடுமையாக உழைக்க உள்ளேன். எங்களுக்கு தெம்பு உள்ளது. பலமான எதிர்க்கட்சி தேர்தல் அமைந்த தேர்தல் இது. எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவோம். முன்பை விட வேகமாக செயல்படுவோம். எங்களுக்கு மக்கள் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொண்டுள்ளனர். இரு கட்சிகளும் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுள்ளன. பணத்தால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். மக்கள் எங்களுக்கும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். பா.ம.க., யோசனைகளை மற்ற கட்சிகள் செயல்படுத்தின. மதுவிலக்கு, லோக் ஆயுக்தா ஆகியவற்றை நாங்கள் முதலில் அறிவித்தோம். இதனை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் அறிவித்தன.

இலவசம் தர மாட்டோம் என நாங்கள் கூறியதை அதிமுக தவிர மற்ற கட்சிகள் செயல்படுத்தின. தேர்தல் ஆணையம் இங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. செயல்படாத தேர்தல் ஆணையம் தான் இங்கு உள்ளது. லக்கானி நல்லவர், ஆனால் வல்லவர் இல்லை. தேர்தல் நடவடிக்கையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர் தேர்தல் அதிகாரியாக இருக்கக்கூடாது. சீர்திருத்தம் தேவை என மத்திய அரசிடம் தலைமை தேர்தல் ஆணையர் கூற வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016