அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வரலாறு வட கிழக்கு மாநிலத்தில் கால்பதித்தது 15 ஆண்டு காங்., அரசு மண்ணை கவ்வியது

திஸ்பூர்: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், தொடர்ச்சியாக அசைக்க முடியாத வெற்றிகளை பெற்று ஆட்சியை பிடித்து வந்த காங்., தற்போதைய தேர்தலில், பா.ஜ.,விடம் படுதோல்வி அடைந்துள்ளது.

காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட இம்மாநிலத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, அதிக தொகுதிகளில் வென்று, காங்கிரசை துவம்சம் செய்துள்ளது. அசாம் மாநில சட்டசபை, 126 உறுப்பினர் பலம் உடையது. இம்மாநிலத்தில், இரு கட்டங்களாக, ஏப்ரல், 4 மற்றும் 11 தேதிகளில், சட்டசபை தேர்தல் நடந்தது; பா.ஜ., 84 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதன் கூட்டணி கட்சிகளான, அசாம் கனபரிஷத், 24; பி.பி.எப்., 16; ரபா ஜதியா ஐக்கிய மஞ்ச், 1; திவா ஜதியா ஐக்கிய மஞ்ச், 1 தொகுதிக ளில் போட்டியிட்டன. பா.ஜ., முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் சர்பானந்தா
சோனவால் நிறுத்தப்பட்டார்.

காங்., தலைமையிலான கூட்டணியில், காங்., 122 தொகுதிகளில் களமிறங்கியது. அதன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய மக்கள் கட்சி, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது.

காலை, 8:00 மணிக்கு, 51 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஓட்டு எண்ணி க்கை துவங்கியது முதலே, பெரும்பாலான தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுகளுடன் முன்னிலை வகித்தனர். மாலையில், முழுமுடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பா.ஜ., கூட்டணி, 86 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. அக்கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 60 தொகுதிகளும்; அசாம் கனபரிஷத்துக்கு, 14 தொகுதிகளும்; பி.பி.எப்.,புக்கு, 12 தொகுதிகளும் கிடைத்தன. கடந்த மூன்று தேர்தல்களில் வென்று, தொடர்ச்சியாக, 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., 26 தொகுதிகளையே பெற முடிந்தது. காங்., அணியில் இருந்த பிற கட்சிகள் வெற்றி பெற வில்லை.

கவிழ்ந்ததும்... தலை நிமிர்ந்ததும்...
முதல்வர் தருண் கோகோய், திதாபார் தொகுதியில் போட்டியிட்டார். இவர், 18 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ஜ., வேட்பாளரை
வென்றார்.சட்டசபை சபாநாயகரும், காங்., மூத்த தலைவருமான பிரணாப் கோகோய், சிப்சாகர் தொகுதியில் களமிறங்கினார். இவர், பா.ஜ., வேட்பாளர்சுரபியை, 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளருளான, சர்பானந்தா சோனவால், மஜுலியில் களம் கண்டார். இவர், காங்., வேட்பாளரை, 19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று வாகை சூடினார்.

காங்கிரஸ் கட்சியில், தருண் கோகோயுடன் ஏற்பட்ட அதிருப்தியால், பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிட்டார். இவர், 89 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார்.

வங்க தேசத்திலிருந்து ஊடுருவலை தடுக்க, இந்தியா - வங்கதேச எல்லையை மூடுவதே எங்கள் தலையாய பணி. குறிப்பிட்ட கால வரையறைக்குள், தேசிய பிரஜைகள் பதிவேட்டை தயாரிப்போம். இவை இரண்டும், புதிய அரசின் முக்கிய சவால்கள்.

சர்பானந்தா சோனவால்முதல்வர் வேட்பாளர், பா.ஜ.,

மக்கள் தீர்ப்பை, தலைவணங்கி ஏற்கிறோம். அசாம் மாநில மக்களுக்கு சேவையாற்றும் வகையில், சட்டசபையில் துடிப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல் படுவோம். மாற்றத்தை விரும்பும் மக்கள், புதிய அரசின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்துள் ளனர்.
தருண் கோகோய் மாநில முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016