விஜயகாந்த், ராமதாசுக்கு நன்றிஜெ.,வுக்கு இளங்கோவன் கோரிக்கை

Tamilnadu Assembly Election News:  விஜயகாந்த், ராமதாசுக்கு நன்றிஜெ.,வுக்கு இளங்கோவன் கோரிக்கை



'மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., என, கட்சிகள் பிரிந்து, தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் விளைவாக, அ.தி.மு.க., வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வுக்கு எதிராக, வலிமையான கூட்டணி அமைந்திருந்தால், அ.தி.மு.க., ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும். இன்றைக்கு, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க.,வும் தான்.தி.மு.க., - அ.தி.மு.க.,வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்தபிறகும், மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தனர் என்பதற்கு அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க., வெற்றிக்கு, யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தால், முதலில் விஜயகாந்த், அடுத்து ராமதாஸ் ஆகியோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
மக்கள் விரோத ஆட்சியை மீண்டும் அமர்த்திய பாவத்தை செய்ததற்காக, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க.,வுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் நிராகரித்துள்ளனர். அதோடு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான விஜயகாந்த், திருமாவளவன் மற்றும் அன்புமணி ஆகியோர் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த தோல்விக்குப் பிறகாவது, அவர்கள் பாடம் கற்றுக் கொள்வர் என, நம்புகிறோம்.ஆளுங்கட்சிக்கு எதிராக, இதுவரை தமிழக சட்டசபை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்க்கட்சியை, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி சார்பாக, மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016