விரக்தியில் விஜயகாந்த் மைத்துனர்

Tamilnadu Assembly Election News:  விரக்தியில் விஜயகாந்த் மைத்துனர்


தேர்தல் தோல்வியால், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் கடும் விரக்தி அடைந்துள்ளார்.தே.மு.தி.க., - -ம.ந.கூ.,- - த.மா.கா., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ், அங்கு, 15 நாட்கள் வரை தங்கியிருந்து, தேர்தல் பணிகளை கவனித்தார்.
விஜயகாந்த் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வார் என்று கணக்கு போட்டார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, மூன்றாம் இடத்திற்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார். இதனால், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், கடும் விரத்தி அடைந்துள்ளார்.
இந்நிலையில், அவரை மொபைல் போன் மூலமும், சமூக வலைதளம் மூலமும், தே.மு.தி.க.,வினர் பலரும் தொடர்பு கொண்டனர்.தே.மு.தி.க.,வும், விஜயகாந்தும் தோல்வி அடைந்ததற்கு, தங்கள் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தனர்.'தி.மு.க., கூட்டணிக்கு போயிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது' என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதனால், கடும் விரத்தியடைந்த சுதீஷ், தனது சமூகவலைதள பக்கத்தில், 'எனக்கு யாரும் தொந்தரவு தரவேண்டாம். ஏனென்றால், எற்கனவே நான் தொந்தரவாக இருக்கிறேன்' என்ற ஆங்கில வாசகத்தை முகப்பு படமாக இப்போது போட்டிருக்கிறார்.
தனது கஷ்டத்தை, அவர் இப்படி உணர்த்தி இருக்கிறார் என புரிந்து, அவரை தொடர்பு கொள்வதை கட்சியினர் நிறுத்திக் கொண்டனர்.
-- நமது சிறப்பு நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016