விஜயகாந்த் 'டிபாசிட்' காலி

Tamilnadu Assembly Election News:  விஜயகாந்த் 'டிபாசிட்' காலி


உளுந்துார்பேட்டை தொகுதியில், தோல்வியை தழுவியது மட்டுமல்லாமல், மூன்றாவது இடத்திற்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார்; கூடவே டிபாசிட்டும் பறிபோனது. மொத்தமாக, 34,447 ஓட்டுகளை மட்டுமே விஜயகாந்தால் பெற முடிந்தது. இது, அ.தி.மு.க., - -தி.மு.க., வேட்பாளர்களை காட்டிலும், 40 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் குறைவாகும். அவரது கூட்டணியும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
'சத்தியமே ஜெயிக்கும்'விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால், எல்லா நேரங்களிலும், சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; ஆனால், தர்மம் மீண்டும் வெல்லும்.
- நமது நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016