பரிதாப நிலையில் பாஜ தலைவர்கள்

Tamilnadu Assembly Election News: பரிதாப நிலையில் பாஜ தலைவர்கள்

சென்னை: இந்த தேர்தலில் ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட பாஜ தலைவர்களின் நிலைமை தான் பரிதாபமாக போனது.

''மாற்றத்தைத் தாருங்கள்; திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கொடுங்கள்'' என்ற கோஷத்துடன் தமிழக பாஜ, தேர்தலை சந்தித்தது. பிரதமர் மோடியே மெனக்கெட்டு, தமிழகம் வந்து சில பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு சென்றார். இதனால் அவர்களது எதிர்பார்ப்பு அதிகமானது.ஆனால் இன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நிலைமையே தலைகீழ் ஆனது. சென்னை டி.நகரில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா, 4000 ஆயிரம் ஓட்டு பெறறு 3வது இடத்தில் இருக்கிறார்.

அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, விருகம்பாக்கம் தொகுதியில் 10,526 ஓட்டுகளுடன் 3வது இடத்திலும், மாநில செயலாளர் வானதி, 11,610 ஓட்டுகள் பெற்று 3வது இடத்திலும் இருந்தனர். இது அக்கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016