தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி

Tamilnadu Assembly Election News: தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: 234 தொகுதிகளிலும் தி.மு.க., அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்துள்ளனர். இதனால் இங்கு நியாயமான தேர்தல் நடக்காது என்றும், நாளை 16 ம் தேதி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் கமிஷனை கேட்டு கொண்டுள்ளார்.


சென்னையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் 234 தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளன. மக்களுக்கு ரூ.500, ரூ.1000, ரூ.2000, ரூ.5000 என லஞ்சமாக கொடுத்துள்ளனர். இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். இருகட்சிகளும் பணத்தை வைத்து ஓடடு வாங்குவார்கள் என நாங்கள் பல நாட்களாக கூறி வருகிறோம். ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறை இது தமிழகத்தில் நீண்ட நாட்களாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு கேலிக்கூத்தாக உள்ளது.


தமிழகத்தில் அதிகாரமில்லாத தேர்தல் ஆணையம் உள்ளது.பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இல்லை. கடந்த இரண்டு நாட்களாக பணம் கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். பென்னாகரம் முதல் சென்னையில் சோதனை சாவடியில்லை. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?


ரூ.5000 கொடுத்த அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால் ரூ500 கண்டுகொள்ளவில்லை. திருவாரூரில் கருணாநிதியும் பணம் கொடுத்துள்ளனர். ஸ்டாலின் தொகுதியில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். இவர்களா ஊழல் இல்லாத ஆட்சியை தருவார்கள். நாங்கள் ஒரு மாதமாக மக்களை சந்தித்து வருகிறோம். உலகளவில் தமிழகத்தன் மானம் போய்விட்டது. தமிழகத்தை பார்த்து உலகமே சிரிக்கிறது. அடுத்தடுத்து புகார் கொடுக்க தேர்தல் ஆணையம் என்ன தபால் அலுவலகமா? ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு அதிக பணம் கொடுப்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் என அறிவித்துவிடுங்கள். பா.ம.க.,வை அனைத்து தொகுதிகளில் தகுதிநீக்கம் செய்து விடுங்கள்.


பணம் கொடுப்பது அனைவருக்கும் தெரியும். எங்கெங்கு பணம் கொடுத்தது பற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து அதிகாரிகள் நியமனம் செய்து தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என லக்கானியிடம் புகார் மனு அளித்துள்ளேன். கோவையில் அதிகாரிகள் வாகனத்தில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்தது பற்றி சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அல்லாமல் இரு கட்சிகளும் வேட்பாளர்களை பணம் கொடுத்து திருடுகினறனர் வாங்குகின்றனர். தேர்தல் ஆணையம் ஏன் அமைதியாக உள்ளது. என்ன காரணம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016