தேர்தல் கமிஷன் மீதுகிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Tamilnadu Assembly Election News:  தேர்தல் கமிஷன் மீதுகிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

துாத்துக்குடி,: “கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப்பணம் வழங்கியதை தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி நேற்று மாலை தனது இறுதி கட்ட பிரசாரத்தை ஒட்டப்பிடாரம் பஜார் பகுதியில் முடித்தார்.அப்போது அவர் பேசியதாவது: தேர்தலின் போது கிராமங்கள் தோறும் தேர்தல் கமிஷன் பறக்கும்படை அமைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம்
வினியோகம் தாராளமாக நடந்தது. அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது.வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதை பறக்கும்படையினர், போலீசார் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளவில்லை. துாத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் மாவட்ட நிர்வாகம் பணிகள் செய்யவில்லை. நான்தான் கோர்ட்டில் வழக்கு தொடுத்து தண்ணீர் வடியவைக்க நடவடிக்கை எடுத்தேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016