தி.மு.க., கூட்டணி, பா.ஜ., தே.மு.தி.க., பிரசாரம் நிறைவு

Tamilnadu Assembly Election News: தி.மு.க., கூட்டணி, பா.ஜ., தே.மு.தி.க., பிரசாரம் நிறைவு

ராமநாதபுரம்: தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா, பா.ஜ., வேட்பாளர் துரைக்கண்ணன், தே.மு.தி.க.,வேட்பாளர் சிங்கை ஜின்னா ஆகியோர் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜவாஹிருல்லா, நேற்று மாலை ராமநாதபுரம் கேணிக்கரையில் இருந்து இறுதிகட்ட பிரசாரத்தை துவக்கினார். அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளில் சுமார் 100 தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வரிசைமுகமது, தி.மு.க., மாநில மகளிர் அணி துணை செயலாளர் பவானி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், காங்., மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் உள்பட கட்சினர் கலந்து கொண்டனர்.

புதிய பஸ்ஸ்டாண்ட் அண்ணாசிலை அருகே மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

*பா.ஜ., வேட்பாளர் துரைக்கண்ணன் ராமேஸ்வரத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி தலைமையில் 150 பெண்கள் உள்பட 300 பேர் பிரசார நிறைவு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலம் ராமேஸ்வரம் கோயில் மேலவாசல் அருகே இருந்து மாலை 3 மணிக்கு துவங்கியது. நகரின் அனைத்து வீதிகள் வழியாக சென்று ஓட்டு சேகரித்தனர். மாலை 5.55 மணிக்கு மீண்டும் மேலவாசல் அருகே பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், துணைத் தலைவர் பாண்டியன், ராமேஸ்வரம் நகர தலைவர் முத்துச்செல்வம், தேர்தல் பொறுப்பாளர் நாகேந்திரன், மண்டபம் ஒன்றிய தலைவர் நம்புராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.

தே.மு.தி.க., வேட்பாளர் சிங்கை ஜின்னா, தனது பிரசாரத்தை ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவு செய்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016