தேர்தல் கிசு.. கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு...

செந்துாரில் போட்டியிடும் சமத்துவத் தலைவர், அங்கே வெற்றி வாகை சூடக் கூடாது என்பதில், சூரிய கட்சி தலைவரை விட, சினிமா பார்ட்டி ஒருவர் ஆர்வமாக உள்ளாராம். இதற்காக, தன் ரசிகர்களை செந்துாருக்கு அனுப்பி உள்ளாராம், ரெட்டி நடிகர்.

சொந்த ஊருக்கு பிரசாரத்துக்காக சென்ற, சூரிய கட்சியின் மூத்த தலைவருக்கு, இரண்டு நாட்கள் கடுமையான உடல் நிலை பாதிப்பாம். பிரசாரத்துக்கு செல்லக் கூடாது என, மருத்துவர்கள் அறிவுரையை மீறி, பிரசாரத்துக்கு சென்றாராம்.


'அவசரமாக இலை கட்சி ஆசாமிகள், கட்சிக்கு அழைத்து சென்றனர். ஆனால், எனக்கு கடைசி வரை, பிரசார வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. கட்சித் தலைவியிடம் எப்படி சொல்றதுன்னும்

புரியலை என, புலம்புகிறாராம் மச்சான்ஸ் நடிகை.


இரவானால், கட்சியின் சக தலைவர்களுக்கு போன் போடும் சூரிய கட்சியின் அண்ணாமலை ஊர்க்கார தலைவர், 'நீ இந்த முறை தேர்றது கஷ்டம். எனக்கு தகவல் அப்படித்தான் கிடைத்துள்ளது' என கலாய்க்க, பலருடன் சண்டையாம்.


'நானும் தான் நல்லா தமில் பேசறேன். ஆனா, எனக்கு மட்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?' என, கை கட்சியின் மாநிலத் தலைவரிடம், நக்மமான நடிகை நேரடியாகவே கேட்க, பதில் எதுவும்வரவில்லையாம்.


'தலைவரே, தேர்தலுக்குப் பின், கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கட்சி மாறத்

தயாராகி விட்டனர்' என, கறுப்புத் துண்டு தலைவரிடம், மாநில நிர்வாகி ஒருவர் சொல்ல, 'ஏன், நீயும் கூட கட்சி மாறலாம்; எந்த தடையும் இல்லை' என கொந்தளித்தாராம்.


'தேர்தல் என்றால், வெற்றி - தோல்வி இருக்கத்தான் செய்யும். கருத்துக் கணிப்புகளை பார்த்து, ஒரு நாளும் கலக்கம் அடையக் கூடாது. எத்தனை கணிப்புகளைப் பார்த்தவன் நான்' என, முதல்வர் வேட்பாளரானபுதல்வனுக்கு அறிவுரை சொன்னாராம் மருத்துவர்.


தனக்கு வேண்டப்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரு தொகையை, தேர்தல் செலவுக்காக கொடுத்த

சூரிய கட்சியின் தளபதி, மற்றவர்களுக்கு பணம் கொடுக்காத தால், பலரும் தலைமையிடம் புகார் சொல்ல கட்சிக்குள் கொந்தளிப்பாம்.


சூரிய கட்சி யின் மொழியான கனியை, மதுரைக்கார அண்ணாச்சியின் துாதர்கள் சிலர் சந்தித்தனராம். 'இந்த முறை தென் மாவட்டங்களில் கட்சி பெரிய அளவில் ஜெயிக்கும். அதற்கு காரணம் நீங்கள் தான், என்அண்ணாச்சியே சொன்னார்' என, சொன்னார்களாம்.


'எனக்கு தொகுதிக்குள் ரொம்ப இம்சையாக இருக்கிறார்' என, தற்போதைய வணக்கத்துக்குரியவர் பற்றி,முன்னாளானவர் கட்சித் தலைவரிடம் சொல்ல, 'ஆட்சிக்குவந்ததும், அவர் வண்டவாளங்களை தோண்டலாம்' என,சொன்னாராம் தலைவர்.


'நாம் ஜெயிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; நம்மை ஏமாற்றி விட்டு, சூரிய கட்சி பக்கம் போன, அந்த மூவரும் தோற்க வேண்டும்; அதற்காக அந்த தொகுதியில் கடுமையாக உழைக்க வேண்டும்' என, கட்சியினரிடம் தொடர்ந்து சொல்லி வந்தாராம், முரசு தலைவர்.


'இந்த தேர்தலில், எந்த இடத்திலும் இலை கட்சியுடன் எந்த காம்பரமைசும் கிடையாது. முடிந்த வரை இலை கட்சி ஆட்சியை விமர்சிக்க வேண்டும்' என, தாமரை கட்சியின் மேலிட உத்தரவை தொடர்ந்து தான், தமிழக தலைமை அதிரடி கிளப்புகிறதாம்.


புலிப்படை என, திடுமென புறப்பட்டு வந்து இலை கட்சியில், 'சீட்' பெற்ற, அந்த நடிகருக்கு, இலை கட்சியினர், தொகுதியில் கடும் இம்சை கொடுப்பதை, திரைத் துறையில், அவருக்கு எதிராக இருக்கும் பலரும் ரசித்து வருகின்றனராம்.


முருகன் பெயர் கொண்ட அந்த முன்னாள் பாலாஜியானவர், சொந்த தொகுதியில் இருந்து பக்கத்தில் உள்ள குறிச்சி தொகுதிக்கு மாறினார். ஆனால், சொந்த தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு கடைசி வரை உதவிகளை செய்தாராம்.


கட்சியின் கடும் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட நத்தமானவர் மீதான விசாரணையில், கட்சி மேலிடம் ஈடுபட்டு வருகிறதாம். இதில், வெளிநாட்டு மூதலீடுகள் குறித்த ஆவணங்கள் கிடைக்க, தேர்தலுக்கு பின்னும் அதிரடிகள் தொடருமாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016