கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

எல்லபுகழும் உங்களுக்கே வாக்காளர்களே!

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வாஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களி படைத்த மொழியினாய் வா வா வா

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறு போல் நடையினாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா

எதிரிலா வலத்தினாய் வா வா வா

(இங்கே இடம் பெற வேண்டிய இரண்டு வரிகளை

இத்தருணத்தில் வெளியிட இயலவில்லை)

களையி ழந்த நாட்டிலே முன்போலே

கலைசி றக்க வந்தனை வா வா வா

விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்

விழியினால் விளக்குவாய் வா வா வா

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா

விநயம் நின்ற நாவினாய் வா வா வா

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா

முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா

கருதிய தியற்றுவாய் வா வா வா

ஒற்றுமைக்குளுய்யவே நாடெல்லாம்

ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா!


- நெஞ்சம் நிமிர்ந்திருக்க

அன்றே சொல்லிச் சென்றார்

பாரதி. இன்றைய வாக்காளர்களுக்கு

இது பொருந்தும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016