அதிமுக.,விற்கு இலையுதிர் காலம் : ஜவடேகர்

Tamilnadu Assembly Election News: அதிமுக.,விற்கு இலையுதிர் காலம் : ஜவடேகர்

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், நேற்று இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் பிரதமர் மோடி பேசி உள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் திமுக, அதிமுக.,விற்கு எதிராக மவுனஅலை வீசி வருகிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். வேலைவாய்ப்பை தராத தன்மை போன்றவற்றிற்கு எதிரான அலை வீசுகிறது. ஜெயலலிதா குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளதாக கூறுகிறார். ஆனால், மது கடைகளை திறந்து மது குடிக்க பழக்குவது தான் அம்மாவின் இலக்கணமா? அதிமுக.,வுக்கு இது வசந்த காலம் என ஜெலலிதா கூறுகிறார். ஆனால் இனி இலையுதிர் காலம் தான். இந்த தேர்தலில் 2 திராவிட கட்சிகளுக்கும் மக்கள் கடுமையான தண்டனை கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016