பிரதான எதிர்க்கட்சி ஊடகம் தான்: ராமதாஸ்

Tamilnadu Assembly Election News: பிரதான எதிர்க்கட்சி ஊடகம் தான்: ராமதாஸ்

சென்னை : சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சி ஊடகங்கள் தான். ஜனநாயகத்தின் 3 தூண்களையும் விமர்சிக்கக் கூடியது ஊடகங்கள் தான். ஆனால் நான்காவது தூணான ஊடகங்கள் சில ஆளும்கட்சி மற்றும் ஆண்டகட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பே திமுக.,விற்கு எதிரான அதிர்வலையை ஏற்படுத்தியது ஊடகங்கள் தான். தற்போது அதிமுக.,விற்கும் திமுக.,விற்கும் எதிரான அலை எழுந்தற்கு இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி தான் காரணம். அதிகாரிகளுக்கு தெரிந்தே அதிமுக.,வும் திமுக.,வும் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்கின்றன என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016