கவித! கவித!

Tamilnadu Assembly Election News: கவித! கவித!

மாறுபட்ட தேர்தல் இது!
எங்க நாட்டு தேர்தல் எல்லா நாட்டினும்

மேம்பட்டது தான்!


பல கோடிபேர்

ஒரு சிலரை

வாழ வைக்கும்

வேலைவாய்ப்பு

திருவிழா இது!


வெள்ளைச்

சட்டை வேந்தர்

எல்லாம்

கறுப்பு கொள்கை

கடைபிடிக்கும்

கவர்ச்சி திருவிழா!


நீர்த்துப்போன

வாக்குறுதிகளை

மீண்டும் மீண்டும் கூறி

பூர்த்தி செய்வதாக

உறுதியளிக்கும்

புதுமை விழா!


கொள்கையில்லா

பேர்வழிகள்

கூட்டணி அமைத்து

கொள்ளையடிக்க

வருகின்ற

கூத்துத் திருவிழா!


ஐந்தாண்டுக்கு

ஒருமுறை

கையில் மை வைத்து

காதில் பூ வைக்கும்

கலக்கல் திருவிழா!


வீடுதோறும்

தேடி வந்து

மக்கள் மனதை

'கவர்'ந்து இழுத்து

மானத்தையும்

விலை பேசும்

மாண்புமிகு திருவிழா!


இத்திருவிழா

வித்தியாசமானதுதான்

எங்களையே

சுற்றிவந்து

உரிமையை

வாங்கியவர்

திருவிழா

முடிந்தபின்

தேவையின்றி

வரவே மாட்டார்.

'உங்களால் நான்'

என்றவரும்

உங்களுக்காகத் தான்

என்று கூறி

எங்கள் பணத்தை

எங்களுக்கே

பிச்சையிடுவதாய்

பிதற்றி திரிவர்!


'நமக்கு நாமே'

என நடந்தவரும்

தமக்குத்தாமே

காரில் சென்றுதான்

கடமையாற்றுவார்

மாற்றம்

தருவோமென

பேசித்திரிந்த

மற்றுமொரு

கூட்டணியும்

மறுமுறை

தேர்தலிலும்

மாற்று அணி

அகப்படுமா

என்றுதான்

தேடியலையும்

மொத்தத்தில்

உரிமை வேட்டி

இழந்தவர்கள்

ஓட்டாண்டி ஆகி,

அம்மணமாய்

நின்றாலும்

ஆனந்தமே கொள்வர்!


அதனால்

தமிழக தேர்தல்

தரணியிலே

மாறுபட்டதுதான்!


ஜி.மனோகரன்,

உதவி செய்தி ஆசிரியர், தினமலர்,

திண்டுக்கல்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016