ஓடம் நதியினிலே... தமிழிசை மட்டும் கரையினிலே!

Tamilnadu Assembly Election News: ஓடம் நதியினிலே...  தமிழிசை மட்டும் கரையினிலே!

தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், தமிழக கட்சி தலைவர்களின் மனநிலைக்கு தகுந்த, 'சிச்சுவேஷன் சாங்ஸ்' இதோ:

கருணாநிதி: வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உடன்பிறப்பே உன்னை சேரும்!


ஜெயலலிதா: அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்; அது, ஆணவச் சிரிப்பு; தேர்தல் முடிவு வந்த பின், சிரிப்பது யார், அழுவது யார்? தெரியும் அப்போது!


வைகோ: உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமய்யா... அது வாக்காளர்கள் செய்த குற்றமய்யா...


தமிழிசை: ஓடம் நதியினிலே, தமிழிசை மட்டும்

கரையினிலே...!.


ராமதாஸ்: ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ... முதல்வர்

வேட்பாளராகும் போட்டி யில் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாயோ...?சரத்குமார்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே...


ஜெ.தேவ், மதுரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016