மவுன புரட்சி மூலம் பாடம் திருமாவளவன் நம்பிக்கை

Tamilnadu Assembly Election News:  மவுன புரட்சி மூலம் பாடம் திருமாவளவன் நம்பிக்கை

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:- தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் கடந்த கால தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை, முழுமையாக நிறைவேற்றியிருந்தாலே, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

தற்போது கூட, அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற அதிகார போதையில், இரு கட்சிகளும் தள்ளாடுகின்றன. தற்போது, அவர்கள் கொடுக்கும் பொய்யான, கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. அதிகார போதையில் தள்ளாடும் இரு கட்சிகளுக்கும், மக்கள் தங்கள் மவுன புரட்சியின் மூலம் பாடம் கற்பிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016