தேர்தல் கிசு.. கிசு...

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு...

தாமரை கட்சியின் உறுத்தலாக இருப்பதாக பலராலும் எரிச்சலாக சொல்லப்பட்ட, அப்சரமான பெண்மணிக்கு, கட்சி மீது பிடித்தம் இல்லையாம். அதனாலேயே, அவர் தனது நண்பர்களுடன், இலை கட்சியில் ஐக்கியமாகி விட்டாராம்.

பிரசாரத்துக்காக, தனயன் ஏற்பாட்டில், பாதுகாப்பு அதிகாரி மேற்பார்வையில், கோவையில் இருந்து தயாராகி வந்த வாகனத்தை தவிர, மற்ற வாகனத்தில் சூரிய கட்சித் தலைவர் ஏற மறுக்க, வாகனம் தலைவர் போகுமிடமெல்லாம் செல்கிறதாம்.


முரசு கட்சியின் திருப்பதி பெருமாளானவரும், சூரிய கட்சியின் கோல்டன் முடி தலைவரும், தொழில் முறை பார்ட்னர்களாக இருப்பதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், ஒருவருக்கு மற்றவர் மாறி மாறி உதவுகின்றனராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016