வேளாண் திறன் மேம்பாட்டு மையம் எங்கே? - கானல் நீராகிய 110 விதி

Tamilnadu Assembly Election News: வேளாண் திறன் மேம்பாட்டு மையம் எங்கே? - கானல் நீராகிய 110 விதி

நவீன வேளாண்மையில், விதைப்பு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரையிலான, பல்வேறு வேளாண் பணிகளுக்கு, திறன் மேம்பாட்டுடன் கூடிய, மனித வள ஆற்றல் அவசியமாகிறது.எனவே, மனித வள ஆற்றலை அதிகரிக்கும் வகையில், வேளாண் திறன் மேம்பாட்டு மையம் ஒன்று துவக்கப்படும். இதன்மூலம், வரும், 10 ஆண்டுகளில், 20 கோடி ரூபாய் செலவில், 10 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு, ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்றுவிக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவித்தார்.

- இன்னமும் வேளாண் திறன் மேம்பாட்டு மையம் துவக்கப்படவில்லை. சமீபத்தில் மையம் துவக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


தேசிய மாணவர் படை, என்.சி.சி., மாணவர்கள், தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள, மதுரை இடையாபட்டியில் உள்ள, தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில், வாகனம் ஓட்டுதல், வானுார்தி ஓட்டுதல், ஆயுத பயிற்சி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என, சட்டசபையில் 110வது விதியின் கீழ், ஜெயலலிதா அறிவித்தார்.


- திட்டம் இன்னும்செயல்பாட்டிற்கு வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016