கனா கண்டேனடி தோழி....!

Tamilnadu Assembly Election News: கனா கண்டேனடி தோழி....!

காட்சி 1மே, 19ம் தேதி காலை, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின.

தமிழகத்தில், எதிர்பாராத திடீர் திருப்பமாக, பா.ஜ., 130 தொகுதி களில் வென்று ஆட்சியை பிடித்தது. அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் உடனடியாக சென்னைக்கு வந்து, கமலாலயத்தில் குவிந்தனர்.

''கடந்த, 2014 லோக்சபா தேர்தலைப் போல, பிரதமர் மோடி மேற்கொண்ட சூறாவளி பிரசாரத்தால், தமிழகத்திலும் மோடி அலை வீசியது. இனி, லேடி இல்லை. மோடி தான் என்பது உறுதியாகிவிட்டது,'' என்று தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதமாக பேட்டி தருகிறார்.

அடுத்த முதல்வர் யார் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. ஒருபுறம் தமிழிசைக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே தான் போட்டி என்று பேச்சு அடிபட்டது. மத்திய அமைச்சர் பதவியை உதறி தள்ளவும் பொன்னார் தயாராகிவிட்டார். இல.கணேசன், எச்.ராஜா போன்றவர்களும் முதல்வர் போட்டியில் உள்ளனர்.

யார், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பட்டிமன்றமும், 'டிவி'களில் சூடு பிடித்தன.


காட்சி 2

தமிழக தேர்தலில், ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., கூட்டணி, 145 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

கூட்டணியின், ஐந்து கட்சித் தலைவர்களும், தே.மு.தி.க., தலைமையகம் அமைந்துள்ள கோயம்பேடுக்கு ஓடுகின்றனர். தேர்தல் முடிவு இப்படி இருக்கும் என தெரியாமல், அப்பாவியாய் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்தை சந்திக்கின்றனர்.

'அட நம்புங்க, நீங்க தான் முதல்வர்' என்று அனைவரும் கூற, அவரோ, உடனே, ''ராசய்யாவை போய் பார்க்கணும்,'' என்கிறார். யாரது என்று கூட்டணித் தலைவர்கள் குழம்ப, கவர்னரைத்தான் சொல்கிறார் என்று, 'ஒருவழியாகி' புரிந்து கொள்கிறார்கள்.

அனைவரும் கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர். கதவை திறக்க செக்யூரிட்டி லேட் செய்ய, நாக்கை மடித்து, கையை ஓங்கியபடியே விஜயகாந்த் காரில் இருந்து இறங்க, செக்யூரிட்டி தெறித்து ஓடுகிறார்.


காட்சி 3

தமிழக தேர்தலில், பா.ம.க., 121 தொகுதிகளில் வென்று புதிய சாதனை படைத்தது. 'நாம எங்க ஜெயிக்க போறோம்' என்று தைலாபுரம் தோட்டத்தில், நாட்டு மருந்து அரைத்து கொண்டிருந்த ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இந்த தகவல் சொல்லப்பட்டது.

உடனடியாக, ''எங்கே அந்த பேனா, எங்கே அந்த பேனா,'' என்று அன்புமணி அல்லாடுகிறார். ''கொஞ்சம் பொறு தம்பி, முதல்வரா பதவியேற்க ணும். அப்புறமா, மதுவிலக்கு கோப்புல கையெழுத்து போடலாம்,'' என்று அவரை சமாதானப்படுத்துகிறார் ராமதாஸ்.


காட்சி 4

''டாக்டர், டாக்டர், இவருக்கு என்னமோ ஆயிடுச்சு! துாங்கி எழுந்ததுல இருந்து பேயறைஞ்ச மாதிரி இருக்கார். என்னான்னு பாருங்க,'' என்று தனது கணவரை ஒரு பெண்மணி அழைத்து வருகிறார்.

பரிசோதித்து பார்த்த டாக்டர், 'ஒண்ணுமில்லேம்மா. தமிழக தேர்தல்ல, முதல் முறையாக பல்வேறு முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருக்காங்கல்ல. அதை நினைச்சுட்டே படுத்திருக்கார். பயப்பட வேண்டாம்; இதுல, எந்த கனவும் பலிக்காது' எனக் கூறி, மாத்திரை கொடுத்து அனுப்பி வைக்கிறார்.


எஸ்.ஆராவமுதன், சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016