மாநில அரசு அதிகாரம்: அன்புமணி கோரிக்கை

Tamilnadu Assembly Election News:  மாநில அரசு அதிகாரம்: அன்புமணி கோரிக்கை

சென்னை;பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை: 'மருத்துவக் கல்விக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு அவசியம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ஊரக மாணவர்களில் மருத்துவப் படிப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டால், அதன்பின், கிராமங்களில் இருந்து மருத்துவர்கள் உருவாவது குறைந்து விடும்; கிராம மக்களுக்கான மருத்துவ வசதிகளும் குறைந்து விடும்.இதற்காக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முறையை தீர்மானிப்பதற்கான, மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில், நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரவேண்டும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016