நுழைவுத்தேர்வு ரத்து கருணாநிதி வாக்குறுதி

Tamilnadu Assembly Election News:  நுழைவுத்தேர்வு ரத்து  கருணாநிதி வாக்குறுதி

சென்னை,: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நுழைவுத்தேர்வு இல்லாமல், மருத்துவ கல்லுாரிகளில், உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மருத்துவ கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகள் ஆகியவற்றில், மாணவ, மாணவியர் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, அனைத்து
மாநிலங்களிலும் நடத்தியே
ஆக வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து, நடைமுறையில் இருந்து வரும்சட்டத்தின் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறவோ, அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான ஏற்பாடுகள், போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப்படும்.
தமிழக மாணவர்கள், தொடர்ந்து நுழைவுத்தேர்வு இல்லாமல், மருத்துவம், பொறியியல் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில், தங்களுடைய உயர்கல்வியைதொடருவதற்கு, அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்ளும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அளித்த பேட்டி:தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அ.தி.மு.க., காலம் கடத்தி, தற்போதுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவசங்கள் அனைத்தும், நல்ல எண்ணத்தோடு இடம் பெறவில்லை. மக்களை ஏமாற்றும் நோக்கில், அவை இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016