கால்வாய் புனரமைப்பு எப்போது நடக்கும்? -கானல் நீராகிய 110 விதி

Tamilnadu Assembly Election News: கால்வாய் புனரமைப்பு எப்போது நடக்கும்? -கானல் நீராகிய 110 விதி

மழைக் காலங்களில் காவிரியில் வரப்பெறும், வெள்ள நீரை திருப்பி விடுவதற்காக, கொள்ளிடம் ஆறு பிரதானமாக, ஒரு வெள்ள நீர் போக்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் கீழணை தவிர, எந்த ஒரு பாசன கட்டுமானமும் இல்லாததால், மழைக்காலத்தில் கிடைக்கும் வெள்ள நீர், கீழணைக்கு கீழ்புறம் சென்று, கடலில் வீணாக கலக்கிறது.இதை தடுக்க, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலுார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனுார் - குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே, கீழணையின் கீழ்புறம், ஒரு கதவணை, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில், பெரியாறு பிரதானக் கால்வாயில், ஒன்று முதல் நான்கு வரையிலான பிரிவு வாய்க்கால்கள், 12வது பிரிவு வாய்க்கால், பெரியாறு நீட்டிப்பு கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள், 40 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவித்தார்.


- சமீபத்தில் திட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், இன்னமும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016