தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி: திருமாவளவன்

Tamilnadu Assembly Election News:  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி: திருமாவளவன்

செய்யூர்:தமிழகத்தில், கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என, தேர்தல் பிரசாரத்தில் திருமாவளவன் கூறினார்.காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் (தனி) சட்டசபை தொகுதியில், மக்கள் நலக் கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எழில் கரோலினை ஆதரித்து, திருமாவளவன் திறந்த வேனில், நேற்று முன்தினம், பிரசாரம் செய்தார்.


தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து, முதன் முறையாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளோம். 48 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்று அணி உருவாகவில்லை. முதன்முதலில் ஆறு கட்சிகள் ஒன்றுசேர்ந்து, மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம்.தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளாலும், ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல் இல்லாத ஆட்சியை விஜயகாந்தால் தான் தர முடியும்.


தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை மூடுவோம் என்கின்றனர். அவர்கள் மூட மாட்டார்கள். காரணம், சாராய ஆலைகள் அனைத்தும், இந்த இருகட்சியினரிடம் தான் உள்ளன.இப்போது, சில பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு என சொல்லி, மக்களை திசை திருப்ப முயல்கின்றன. இது ஒரு சாராருக்கு சாதகமாக வெளியிடப்படுகிறது. கருத்துக் கணிப்பை நம்பாதீர்கள். ஏன் என்றால், போனமுறை நான் வெற்றி பெறுவேன்

என கருத்துகணிப்பு கூறியது. ஆனால், நான் தோல்வி அடைந் தேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016