தே.மு.தி.க.,- ம.ந.கூ., செயலிழந்துவிட்டது: ஐக்கிய ஜமாஅத் அப்துல்அக்கீம் 'கணிப்பு'

Tamilnadu Assembly Election News: தே.மு.தி.க.,- ம.ந.கூ., செயலிழந்துவிட்டது: ஐக்கிய ஜமாஅத் அப்துல்அக்கீம் 'கணிப்பு'


விழுப்புரம்: டாஸ்மாக்கை முடக்க கருணாநிதி ஆட்சி அமைய வேண்டுமென ஐக்கிய ஜமாஅத் பேரவை இளைஞரணி செயலா ளர் அப்துல் அக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் அக்கீம் கூறியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் நகர மன்றம், நிர்வாகம், பேரூராட்சிகள் முடங்கி போயுள்ளது. எந்த விதமான அரசு துறைகள் சார்ந்த பணிகளும் நடைபெறவில்லை.

சாலைவசதி மேம்பாட்டு பணிகள், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிதட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் கூட தீர்க்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை, தொழில் துறை வளர்ச்சி, நீர்நிலை பாதிப்புகள் இங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ளது.

செயல்படாத ஆட்சி தான் ஜெ., ஆட்சி. விழுப்புரம் மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் தங்களின் நீர்நிலைகள் பாதித்து, பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்வதற்கு கடன் பெற்று, அதற்கு வட்டி கட்ட முடியாத நிலை அ.தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டது.

நெல், கரும்பிற்கு சரியான ஆதார விலைகள் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். விழுப்புரம் சட்டசபை தொகுதி தொழில் துறை, விவசாய துறை, சுயதொழில்களில் வளர்ச்சி மற்றும் தனிநபர் வருவாய் உயர்விலும், அரசு திட்டங்கள் விரைவாக செயல்படுத்துவதிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

அரசு துறை நிர்வாகம் சுறுசுறுப்பாக செயல்படவும், அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைந்திட பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

மதுவால் பல குடும்பங்கள் இன்று சீரழிந்து வருகிறது. இதனால் பலர் சாலை விபத்தில் இறக்கின்றனர். டாஸ்மாக்கை முடக்க வேண்டுமானால் கருணாநிதி ஆட்சி அமைய வேண்டும். விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமீர்அப்பாசை வெற்றி பெற செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 3வது அணி மற்றும் அ.தி.மு.க.,வின் 'பி' டீம் என்பது செயலிழந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டுமானால், மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர்.

இவ்வாறு அப்துல்அக்கீம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016