தேர்தல் கிசு.. கிசு..

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு..

புலிப் படை கட்சியின் நடிகர் - தலைவர், ராமநாதபுரம் சென்று, இலை சின்னத்தில் போட்டியிட, சொந்த ஊரில், 'சீட்' கிடைக்காத ராஜாவானவரும், முத்தானவரும் ஒத்துழைப்பதில்லையாம். தலைமைக்கு தகவல் போய் உள்ளதாம்.

சிறுத்தை கட்சி சார்பில், இலை கட்சி தலைவியை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ள பெண்மணியை, பிரசாரத்துக்கு தினந்தோறும் அழைத்து வருவதற்குள், கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் மண்டை காய்கின்றனராம்.


சமீப நாட்களாக, கறுப்புத் துண்டு தலைவரின் நடவடிக்கைகளைப் பார்த்த குடும்பத்தினர், 'வயதாகி விட்டது. இனியும் நமக்கு அரசியல் வேண்டாம்; ஒதுங்குங்கள்' என, தலைவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து உள்ளனராம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016