தேர்தல் கிசு.. கிசு..

Tamilnadu Assembly Election News: தேர்தல் கிசு.. கிசு..

'தமிழக தலைவர்கள் எடுத்த முடிவை, டில்லி தலைமை ஏற்றுக் கொண்டது. அதனால் இந்த முறை, கட்சி சார்பில் ஓரிருவராவது வென்றாக வேண்டும்' என, தாமரை கட்சியின் தேசிய தலைவர் சொல்ல, அதிர்ந்து போயிருக்கிறதாம், மாநிலத் தலைமை.

டெல்டா மாவட்டத்தின் முத்தான ராஜா இனத்திலிருந்து, சூரிய கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்தவரை, இலை கட்சிக்கு கொண்டு வந்தனர். அவர் ஓட்டு கேட்க போகும் இடங்களில் எல்லாம் விரட்டி அடிக்க, இலை கட்சியினர் அதிர்ந்துள்ளனராம்.


இலை கட்சியின் தலைமை போட்டியிடும் நகரில், போட்டி கடுமையாக இருக்கிறது என, உளவுத் துறை தகவல்கள் சொல்ல, பகுதியின் கட்சி நிர்வாகிகள், அவசரமாக அழைக்கப்பட்டு, பிரசாரத்தில் தாராளம் காட்ட உத்தரவிடப்பட்டு உள்ளதாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016