கவித... கவித....

Tamilnadu Assembly Election News: கவித... கவித....

கட்சியே முள்ளானதால் நெஞ்சில் ஒரு பாரம்


( 'ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்' பாடல் பாணியில் மைகோவை நினைத்து, அஜயகாந்த் பாடுகிறார்)


தொகுதி தெரிஞ்சிக்கிட்டேன்நிலைமை புரிஞ்சிக்கிட்டேன்

கண்மணி என் கண்மணி

உண்மை தெரிஞ்சுடுச்சு

உள்ளடி புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

கெஞ்சி கேட்டதால

கூட்டணியும் அமைச்சேன்

இப்ப என்பேச்சு கேட்காம

என்னமோ நடக்குதடி

(தொகுதி...)

ஏது கூட்டணி பாசம்

எல்லாம் வெளிவேஷம்

காசு பணம் வந்தா

நேசம் சில மாசம்

பேசினார் மைகோ பேசினார்

எல்லாம் சீன் தானோ

வேப்பிலை கருவேப்பிலை

அது யாரோ நான் தானோ

என் கட்சி எம்.எல்.ஏ.,க்கள்

எனக்கு எதிரா போட்டியிட்டு

என் மார்பில் முட்டுதடி

கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயத்துல

பச்சை முண்டாசும் இடிக்குதடி

கண்மணி என் கண்மணி

(தொகுதி...)

நேத்து இவன் வெயிட்டு

இன்று இவன் லைட்டு

கட்சியை கரை சேர்க்க

பேசுவேன் இது ரைட்டு

கூட்டணி ஒரு வானவில்

அந்த வர்ணம் கொஞ்சம் நேரம்

கட்சியே முள்ளானதால்

இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணங்காசை கண்டுபுட்டா

புலி கூட புல்லைத் திண்ணும்

தேர்தல் நேரமாச்சுதடி

கண்மணி என் கண்மணி

அடங்காத காளை ஒண்ணு

கைப்புள்ளயா போனதடி

கண்மணி என் கண்மணி

(தொகுதி...)


மருகல் மைந்தன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016