கூட்டணி ஆட்சி தேவை ஏன்: திருமாவளவன் விளக்கம்

Tamilnadu Assembly Election News:  கூட்டணி ஆட்சி தேவை ஏன்: திருமாவளவன் விளக்கம்

''தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல், மதுவை ஒழிக்க, கூட்டணி ஆட்சி தான் தேவை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.


திருவள்ளூர் மற்றும் பொன்னேரி தொகுதி, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பாலசுப்ரமணி, செந்தில்குமார் ஆகியோரை

ஆதரித்து, அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும், கூட்டணி ஆட்சி முறையை அமல்படுத்தாது; அவர்களிடம் யாரும் ஆட்சியில் பங்கு கோர முடியாது. ஆனால், முதல் முறையாக, கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்தவர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.


தமிழகத்தில், ஊழல், மது மலிந்து விட்டது. இதை ஒழிக்க, கூட்டணி ஆட்சி முறை தான் வேண்டும். தமிழக அரசியல் வரலாற்றில், கடந்த, 50 ஆண்டுகளில், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு எதிராக, ஒரு மாற்று அணி உருவாகியிருப்பது, இதுதான் முதன்முறை.தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிய வேண்டும்; கூட்டணி ஆட்சி முறை உருவானால் தான், தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல், மதுவை ஒழிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


கத்தியுடன் பிடிபட்ட வாலிபர்:பொன்னேரியில், திருமாவளவன் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, தேரடி பகுதியில், நான்கு வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றபோது, மூவர் தப்பியோடி விட்டனர்.

பிடிபட்ட, சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வாலிபரிடம் இருந்து இரண்டு கத்திகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016